பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டுக்கான பத்மவிபூஷன் விருதுக்கு இசையமைப்பாளர் இளையராஜாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி அரசியல் தலைவர்கள் மற்றும் திரைக்கலைஞர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வடபழனியிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், வாழ்த்துக்கள் கூறியதுடன் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.
பின்னர் பேசிய அவர், உலகம் முழுவதுமுள்ள தமிழர்களை கலையின் மூலம் ஒன்றிணைக்கும் நோக்கில், தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் வாயிலாக கர்நாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டியத்தை வளர்க்கத் திட்டமிட்டுள்ளதாக கூறினார். இதுகுறித்து இளையராஜாவிடம் ஆலோசனை பெற இருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல், அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச் செல்வனும் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
Loading More post
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
பிரான்ஸுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்... டிஎல்பி கட்சிக்கு 'அஞ்சும்' இம்ரான் அரசு!
உ.பி: ஞாயிறுகளில் ஊரடங்கு; முகக்கவசம் அணியாமல் 2-ம் முறை சிக்கினால் ரூ.10,000 அபராதம்
விலை வீழ்ச்சியால் வேதனை: ஏரியில் தக்காளியை கொட்டும் கிருஷ்ணகிரி விவசாயிகள்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்