பிரதமர் மோடிக்கு எதிராக ‘பக்கோடா’ விற்கும் போராட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரதமர் மோடிக்கு எதிராக ‘பக்கோடா’ விற்கும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.


Advertisement

மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, தினமும் ஒருவர் பக்கோடா விற்று, வீட்டுக்கு 200 ரூபாய் கொண்டு செல்வதை வேலை வாய்ப்பு என்று எடுத்துக் கொள்ள முடியாதா என கேட்டிருந்தார். அவ்வளவுதான் ”பக்கோடா” என்ற சொல்லாடலை வைத்து பிரதமரையும், பாஜக தலைவர்களையும் கேலி செய்ய ஆரம்பித்தனர் காங்கிரஸ் கட்சியினர்.

இதனிடையே நாடாளுமன்றத்தில் தனது கன்னிப் பேச்சை துவக்கிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும், தன் பங்குக்கு பக்கோடா பேச்சில் தன்னை இணைத்து கொண்டார். எந்த வேலைக்கும் செல்லாமல், செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் பக்கோடா விற்பது என்பது அவற்றை விட மேலான விஷயம் என்றார்.


Advertisement

இந்நிலையில் பிரதமரின் ‘பக்கோடா’ பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாணவர்கள் ‘பக்கோடா’ விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதாக அங்கு வந்திருந்தார். அப்போது, பிரதமர் மோடி பங்கேற்ற மைதானத்திற்கு அருகே மாணவர்கள் பக்கோடா விற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியாக சென்றவர்களுக்கும் மாணவர்கள் ‘பக்கோடா’ வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement