[X] Close >

கொல்லிமலையில் மரங்கள் கடத்தல்: புதிய தலைமுறையின் களஆய்வில் அம்பலம்..!

puthiyathalaimurai-exclusive

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வனப்பகுதியில் அனுமதியின்றி விலை உயர்ந்த மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.


Advertisement

கொல்லிமலையில் அனுமதியின்றி மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, பல கிராமங்களுக்கு சென்று புதிய தலைமுறை கள ஆய்வு மேற்கொண்டது. அப்போது, ஆரியூர் நாடு, புதுவளவு, வளப்பூர் நாடு, தாமரை குளம், வாழவந்தி நாடு உள்ளிட்ட பல இடங்களில், பழமை வாய்ந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பலா, சில்வர் ஓக் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் வெட்டப்பட்டிருந்தது. அந்த மரங்களின் மேல் பட்டைகளை எடுத்துவிட்டு கடத்தி செல்வதற்கு தயாராக வைத்திருந்ததை அறிய முடிந்தது.

வெட்டப்பட்ட மரங்கள் எவ்வாறு எடுத்து கடத்தி செல்லப்படுகிறது என்பதை கண்டறிய மாலை முதல் விடியற்காலை வரை காரவள்ளி சோதனை சாவடி அருகே புதிய தலைமுறையின் செய்தியாளர் காத்திருந்தார். அப்போது நள்ளிரவு 12 மணிக்கு மேல் லாரிகளில் விலை உயர்ந்த மரங்களை உள்ளே வைத்தும், வெளிப்புற தோற்றத்திற்கு சில்வர் ஓக் மரங்களை அடுக்கியும் கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்டது.


Advertisement

மாலை 6 மணிக்கு மேல், மலையில் மரங்களை பாரம் ஏற்றி கொண்டு செல்ல அனுமதியில்லாத நிலையில், நள்ளிரவு நேரத்தில் மரங்களை ஏற்றி செல்வதன் மூலம் அதிகாரிகள் உடந்தையாக செயல்படலாம் என்று கூறப்படுகிறது. மரம் கடத்தி வந்த லாரி ஓட்டுநரிடம் கேட்டபோது, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உடனடியாக லாரியை எடுத்துச் சென்றுவிட்டார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close