இந்திய ஜூனியர்களின் பந்துவீச்சு: ஆஸி. கோச் புகழாரம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு அபாரமாக இருப்பதாக ஆஸ்திரேலிய ஜூனியர் டீமின் பயிற்சியாளர் ரியான் ஹாரிஸ் புகழ்ந்துள்ளார்.


Advertisement

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தில் நடந்து வருகிறது. நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்திய ஜூனியர் அணி, பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு வருவதால் கோப்பையை வெல்லும் என்று கூறப்படுகிறது. 


Advertisement

இந்நிலையில் ஆஸ்திரேலிய ஜூனியர் அணியின் பயிற்சியளர் ரியான் ஹாரிஸ் கூறும்போது, ‘சுழற்பந்துவீச்சு பற்றி இல்லாமல், இந்திய ஜூனியர் அணியின் வேகப்பந்துவீச்சு பற்றிப் பேசுவது பெருமையாக இருக்கிறது. அந்த அணியின் நாகர்கோட்டி உட்பட பல பந்துவீச்சாளர்கள் 140 கி.மீ வேகத்தில் பந்து வீசுவது சிறப்பு. இது ஆஸ்திரேலிய அணிக்கு சவாலாகத்தான் இருக்கும். இந்திய அணி சிறப்பான அணிதான். இருந்தாலும் அதற்கு கடுமையான சவாலை ஆஸ்திரேலியா கொடுக்கும்’ என்றார். 

நடப்புத் தொடரில் தோல்வியையே சந்திக்காமல் இந்திய ஜூனியர் அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement