அமலா பால் பாலியல் புகார்: ஒரு மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீசார்

actress-amala-paul-filed-complaint-against-businessmen-azhahesan

நடிகை அமலாபால் அளித்த புகார் தொடர்பாக போலீசார் ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்தனர்.


Advertisement

இயக்குனர் ஏஎல் விஜயை காதல் திருமணம் செய்து கொண்ட அமலாபால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விவாகரத்து பெற்றார். தற்போது தனியாக வசித்து வரும் அவர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அமலா பால் நடிப்பில் வெளியான திருட்டு பயலே படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. 

இந்நிலையில், நடனப்பள்ளி உரிமையாளர் அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாம்பலம் காவல் நிலையத்தில் நடிகை அமலாபால் திடீரென புகார் அளித்தார். மலேசியாவில் இருக்கும் தனது நண்பருடன் டின்னர் சாப்பிட செல்ல வேண்டும் என அழகேசன் அழைத்ததாக தனது புகாரில் அமலா பால் கூறியிருந்தார்.


Advertisement

அமலாபால் புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் தொழிலதிபர் அழகேசனை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமலாபால், “மலேசியாவில் பெண்களின் மேம்பாடு தொடர்பாக டான்சிங் தமிழச்சி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். அதற்காக தி.நகரில் உள்ள நடனப்பயிற்சியில் 3 நாட்களுக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அங்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளிக்கும் வகையில் அவர் என்னிடம் பேசினார். நான் மலேசியாவில் இருக்கப்போவது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒருவர் மூலமாகதான் அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் எதற்காக வாழ்கிறோம். காவல்துறையில் இந்த விவகாரத்தில் துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களுக்கு எனது நன்றி” என்று கூறினார்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement