4 வயது சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.


Advertisement

திருவண்ணாமலை அடுத்த மேல்பாலானந்தல் கிராமத்தை சேர்ந்தவர்கள் பரமசிவம், உஷா தம்பதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்களின் மூத்த மகள் பச்சையம்மாள், மங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் இருந்து வெளியே இச்சிறுமியை, மணிகண்டன் என்பவர் கடத்திச்சென்றார்.

இதையடுத்து சிறுமி காணாமல் போனதை அறிந்த பெற்றோர்கள், மங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பச்சையம்மாளை தீவிரமாக தேடினர். தீவிர தேடல்களுக்குப் பிறகு சிறுமி பச்சையம்மாள், ஆர்ப்பாக்கம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் பிணமாக கைப்பற்றபட்டார். 


Advertisement

இதையடுத்து, விசாரணையில் மணிகண்டன் குழந்தையை கடத்தியது தெரியவர போலீசார் அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சிறுமி பச்சையம்மாளை கடத்தி மற்றம் கொலை செய்த மணிகண்டனுக்கு குற்றவியல் சட்டம் 364யு பிரிவின் படி ஆயுள்தண்டனையும், தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement