சென்னையை அடுத்த பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் மாணவர்கள் அரிவாளுடன் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரட்டூர்-அம்பத்தூர் இடையே உள்ளது பட்டரவாக்கம் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் மாணவர்கள் அரிவாளுடன் வன்முறையில் ஈடுபட்டனர். ஒரு பிரிவு மாணவர்கள் ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தனர். ரயிலில் வந்த மற்றொரு பிரிவினை அவர்கள் திடீரென தாக்கினர். இதில், 3 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
அரிவாளை காட்டி பயணிகளை மிரட்டிய மாணவர்கள், பொதுமக்கள் மீது கற்களை வீசி தாக்குதலிலும் ஈடுபட்டனர். மாணவர்களின் வெறியாட்டத்தால் பொதுமக்காள் அலறி அடித்து ரயில் நிலையத்திற்கு வெளியே ஓடினர். வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் எந்தக் கல்லூரியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. ரயிலில் நடந்த நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டும் இதேபோல் ஒரு சம்பவம் அரங்கேறியது. ஆயுதங்களுடன் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள், பிளாட்ஃபார்மில் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்டவற்றை உரசியபடி பொறிபறக்கச் செல்லும் காட்சி சென்னை அடுத்த நெமிலிச்சேரி ரெயில் நிலையத்தில் நடந்தது.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி