அடுத்த வாரம் பங்குச் சந்தை சரியும்?: கலக்கத்தில் முதலீட்டாளர்கள்

Next-week-will-the-stock-market-fall-

இந்திய பங்குச் சந்தையில் தற்போது, இதுவரை இல்லாத உச்சத்தில் வணிகம் நடந்து வரும் நிலையில், பங்குச் சந்தை வழிகாட்டு ஆணையமான செபி மற்றும் முக்கிய இரு சந்தைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய பங்குச் சந்தை வெளியிட்ட சுற்றறிக்கையில்  இது தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பங்குச் சந்தை வணிக முகவர்களும், வணிகர்களும் அவர்களது வணிகத்தின் போது வழக்கமாகச் செலுத்தும் காப்புத் தொகையை விட கூடுதலாக 18 முதல் 30 சதவீதத் தொகையை செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 


Advertisement

மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருப்பதால், அதில் வருமான வரிச் சலுகை உட்பட பல கவர்ச்சி திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாமானியர்களை கவரும் திட்டங்கள் ஒருபுறம் என்றால், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க - ஒருபுறம் அரசின் வரி வசூலை அதிகரிக்க புதிய யுக்திகளும், அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்க பல சலுகைகளும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு சந்தையில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது எனவும் நம்புகிறார்கள். ஆனால், நீண்ட முன்னோக்கிய பயணத்தைக் கண்டுவிட்ட இந்திய சந்தை அதை சீர்திருத்திக் கொள்வதும் அவசியமாகிறது. எனவே, பாதக தகவல்கள் வரும் பட்சத்தில் எந்த நேரத்திலும் சந்தை கணிசமான சரிவு காண வாய்ப்புள்ளது என்பதால், அப்போதைய பாதிப்புகளை தவிர்க்கவே, இந்தக் கூடுதல் காப்புத் தொகை (Margins) பெறப்படுகிறது என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.

அதனால், வரும் வார இறுதியிலோ, அடுத்த வாரத்திலோ இந்திய பங்குச்சந்தை சரிவை சந்திக்க நேரலாம் என்ற அச்சம் மெல்ல பரவி வருகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement