[X] Close >

தமிழ், தெலுங்கு ‘யு டர்ன்’ ரீமேக்கில் சமந்தா

Samantha-Akkineni-to-star-in-Tamil-and-Telugu-remakes-of-U-Turn

தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாக உள்ள ‘யு டர்ன்’ ரீமேக்கில் சமந்தா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

பவன் குமார் இயக்கத்தில் 2016 ஆண்டில் கன்னடத்தில் வெளியான திரைப்படம் ‘யு டர்ன்’. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிதும் பேசப்பட்ட இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் அதில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் தற்சமயம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ள ‘யு டர்ன்’படத்தில் சமந்தா ஒப்பந்தமாகி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. தற்சமயம் சமந்தா கையில் இரும்புத்திரை, தியாகராஜா குமாராஜா இயக்கி வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’மற்றும் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தா பிசியாக இருக்கிறார். இதை முடித்த கையோடு அவர் ‘யு டர்ன்’ ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தெரிகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close