[X] Close

குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு தந்தை தற்கொலை முயற்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குடும்பத் தகராறு காரணமாக குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு தந்தை விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே கரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கமலக் கண்ணன். இவரது மகன் மதிகினியன்(வயது 3). கமலக் கண்ணனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. குடும்ப சண்டை காரணமாக மனமுடைந்த கமலக் கண்ணன், குழந்தைமதிகினியனை கிணற்றில் வீசிவிட்டு தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். கிணற்றில் வீசப்பட்டதில் குழந்தை மதிகினியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் கமலக் கண்ணனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக திருப்போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement