இளையராஜாவுக்கு ரஜினி, கமல் வாழ்த்து

Rajini-Kamal-wishesh-Maestro-ilayaraja-who--conferred-with-Padma-Vibhushan

பத்ம விபூஷண் விருது அளிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு ரஜினி காந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


Advertisement

குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 2018-ம் ஆண்டிற்கான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத ரத்னா விருதுக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது உயரிய குடிமகன் விருது பத்மவிபூஷண். 

இந்நிலையில், பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு ரஜினி காந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரஜினி காந்த் தொலைபேசியில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


Advertisement

கமல் தனது ட்விட்டர் பதில், “எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை  இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இசைக்கடவுள் இளையராஜாவுக்கு நாட்டின் இரண்டாவது பெரிய விருது அளிக்கப்பட்டுள்ளதாக விஷால் கூறியுள்ளார்.

விஜயகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இசைத்துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்தது மட்டுமல்லாமல் தமிழ் இசையையும், கிராமிய இசையையும் உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியவர் இசைஞானி இளையராஜா. 

பத்ம விபூஷன் விருது பெறும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல விருதுகள் பெற்று, விருதுகளுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement