தமிழக அரசியல் கள நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்: அமித் ஷா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தின் அரசியல் கள நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


Advertisement

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை ஆங்கில நாளிதழ் ஒன்று நேர்க்காணல் செய்தது. அப்போது தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் பலவீனமாக இருப்பதாக தோன்றும் வேளையில் ரஜினி,கமல் போன்றோரின் அரசியல் வருகை இதனை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமித்ஷா, தமிழகத்தின் அரசியல் சூழலை உற்று நோக்குவதாகவும் சரியான நேரத்தில் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்கள் அரசியலில் நுழைந்த நிலையில் மாநிலத்தின் சமன்பாடுகள் மாறிவிட்டன. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றது.2019ல் இந்த நிலை மாறலாம், பல்வேறும் மாற்றங்கள் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளார். 

இன்றைய தினத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றாலும் கடந்த முறையைக் காட்டிலும் அதிக இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்று அமித் ஷா குறிப்பிட்டார்
 


Advertisement


 

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement