சாமானிய மனிதர்கள் இலவசங்களையும், சலுகைகளையும் அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் என்பது தவறான கருத்து என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்றிரவு பேட்டி அளித்த மோடி, நேர்மையான நிர்வாகத்தை மட்டுமே மக்கள் அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் என்றும், இலவசங்களையும், சலுகைகளையும் அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் என்பது தவறான கருத்து என்றும் தெரிவித்தார். தற்போதைய மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் சலுகைகள் இருக்குமா? என்ற கேள்விக்கு மோடி இவ்வாறு பதில் அளித்தார்.
அத்துடன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையே பிரச்னை எழுந்துள்ள நிலையில், அதிலிருந்து அரசியல் கட்சிகளும் அரசும் விலகியிருக்க வேண்டும் என்று கூறினார். காங்கிரஸ் இல்லாத இந்தியா என தாங்கள் கூறுவதன் அர்த்தம், அக்கட்சியை அரசியல் ரீதியாக ஒழிப்பது இல்லை என்றும் வாரிசு அரசியல், ஊழல் உள்ளிட்ட கலாச்சாரங்களை அழிப்பதேயாகும் என்றும் விளக்கமளித்தார்.
Loading More post
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!
’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்