பிறந்து 6 நாட்களே ஆன குழந்தைக்கு நடந்த ஆப்பரேஷன் .!

Baby-born-at-23-weeks-is-youngest-in-the-world-to-survive-life-saving-abdominal-op

லண்டனை சேர்ந்த குழந்தை ஒன்றுக்கு பிறந்து 6 நாட்களிலேயே வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.


Advertisement

லண்டனை சேர்ந்த டேவிட் மற்றும் லூயிஸ் தம்பதியினருக்கு 23 வாரத்திலேயே கடந்த அக்டோபர் மாதம் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. பொதுவாக குழந்தைகள் 38 வாரங்கள் முதல் 40 வாரத்திற்குள் அதாவது 10 மாதத்தில் தான் பிறக்கும். ஆனால் லூயிஸ்-க்கு குறை மாதமாக 23 வாரத்திலேயே குழந்தை பிறந்ததால், அக்குழந்தை வெறும் 1.3 பவுண்ட் அளவு எடை தான் இருந்திருக்கிறது. கிலோ கணக்கில் பார்த்தால் வெறும் (589.69 கிராம் தான்). மேலும் குழந்தைக்கு பெருங்குடல் அழற்சியும் இருந்துள்ளது. எனவே குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரிதும் சிரமப்பட்டுள்ளனர்.

குறைமாதத்தில் பிறந்ததால் பெருங்குடல் அழற்சி இருந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. பெருங்குடல் அழற்சியை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டால் குழந்தை மரணம் அடையும் நிலை ஏற்படும். எனவே குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், பிறந்த வெறும் 6 நாட்களிலே அக்குழந்தைக்கு வயிற்று பகுதியில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது குழந்தை ஆரோக்கியமாக பெற்றோருடன் வசித்துவருகிறது. ஒருவேளை குறை மாதத்தில் பிறக்காமல் இருந்திருந்தால் பிப்ரவரி மாதத்தில் தான் குழந்தை பிறந்திருக்கும். ஆனால் முன்னதாவே பிறந்ததால் தற்போது பெற்றோருடன் 5 மாத குழந்தையாக விளையாடி வருகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement