யார் சிறந்த கேப்டன் என்று தோனியையும் விராத் கோலியையும் ஒப்பிட விரும்பவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறினார்.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தோல்வியை தழுவியுள்ளது. விராத் கோலியின் அணி தேர்வு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் விராத் கோலிக்கு ஆதரவாக ஹர்பஜன் சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, ’கேப்டனாக விராத் கோலிக்கு இதுதான் முதல் வெளிநாட்டுத் தொடர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கையில் நடந்த தொடரை விட்டுவிடலாம். அதனால் இந்த நேரத்தில் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அணி, எதிர்பார்த்தது போல விளையாடவில்லை. அடுத்தப் போட்டியில் இதற்கு பதிலடி கொடுக்கலாம். இந்திய கிரிக்கெட் அணியில் யார் சிறந்த கேப்டன் என்று கேட்கிறீர்கள். தோனியையும் விராத் கோலியையும் ஒப்பிட விரும்பவில்லை. இரண்டு பேருமே வெவ்வேறு காலகட்டங்களில் விளையாடி இருக்கிறார்கள். கேப்டன் பதவி என்பது அதிக பொறுப்பைக் கொண்டது. விராத் கோலி இதுவரை சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். இன்று அவர் உச்சத்தில் இருக்கிறார். அவரை இப்படிப் பார்க்க பெருமையாக இருக்கிறது’ என்றார்.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!