சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் கோச் ஆனார் எல்.பாலாஜி!

Chennai-Super-Kings-pick-L--Balaji-bowling-coach

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் எல்.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்காமல் இருந்த சிஎஸ்கே அணி, இந்தாண்டு விளையாடுகிறது. அணியின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் நீடிக்கின்றனர். அஸ்வின் உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளதாக தோனி தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளம்மிங் அப்படியே தொடர்கிறார். இந்நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளராக எல்.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். 

சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த எல். பாலாஜி, பஞ்சாப் அணிக்கு சென்றார். பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்து விளையாடினார். பின்னர் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக கடந்த வருடம் வரை பணியாற்றினார். இந்நிலையில் இப்போது சிஎஸ்கே அணிக்கே திரும்பி இருக்கிறார். 


Advertisement

இதுபற்றி எல்.பாலாஜி கூறும்போது, ’சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அணியுடன் எனக்கு அற்புதமான நினைவுகள் இருக்கின்றன. பயிற்சியாளர் பணியை துவங்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி சிறப்பாக விளையாடி வந்திருக்கிறது. அணியில், தமிழ்நாட்டில் உள்ள திறமையான வீரர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம். திறமையானவர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும்’ என்றார். 


 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement