பாலிவுட் நட்சத்திரங்களுடன் செல்பி எடுத்த இஸ்ரேல் பிரதமர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுடன் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு செல்பி படம் எடுத்துக் கொண்டார்.


Advertisement

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது மனைவி மற்றும் வர்த்தகக் குழுவுடன் 6 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்த பயணத்தின் போது இந்தியா-இஸ்ரேல் இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதையடுத்து நேற்று ஆக்ரா சென்ற இஸ்ரேல் பிரதமர் தனது மனைவியுடன் தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்தார்.

இந்திய சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டத்தில் மும்பைக்கு வந்த இஸ்ரேல் பிரதமர் பாலிவுட் நட்சத்திரங்களை சந்தித்தார். அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுடன் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு செல்பி படம் எடுத்துக் கொண்டார். இயக்குநர்கள் கரண் ஜோகர், சுபாஷ் கய், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலருடன் நேதன்யாகு உடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். நேதன்யாகு இந்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

           

பாலிவுட் நட்சத்திரங்கள் உடனான சந்திப்புக்கு பின் பேசிய நேதன்யாகு, “பாலிவுட்டை நாங்கள் நம்புகிறோம். உலகம் பாலிவுட்டை நேசிக்கிறது. இஸ்ரேலும் பாலிவுட்டை நேசிக்கிறது. இஸ்ரேல் நாட்டில் பாலிவுட் வரவேண்டும் விரும்புகிறது” என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement