ஓடும் பேருந்தில் தீ விபத்து: 52பேர் தீயில் கருகி உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கஜகஸ்தானில் ஓடும் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 52பேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.


Advertisement

ரஷ்யாவின் சமரா நகரில் இருந்து கஜகஸ்தான் நாட்டின் ஷிம்கென்ட் நகருக்கு பேருந்து  ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் மொத்தமாக 57 பேர் பயணம் செய்திருக்கின்றனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக ஓடும் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 52 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். 5 பேர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணியளில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.


Advertisement

உயிரிழந்த பயணிகள் உஸ்பெக்கிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் பேருந்து எப்படி தீப்பிடித்தது என்பதற்காக காரணங்கள் இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement