சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நான் காமெடியன்: விக்ரம் ஃபீலிங்

Actor-Vikram-shares-his-feelings-about-actor-soori

சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நான் காமெடியனான நடிக்கத் தயார் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.


Advertisement

‘வாலு’பட இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில், விக்ரம், தமன்னா மற்றும் பலர் நடிக்க, பொங்கல் வெளிவந்த 'ஸ்கெட்ச்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விக்ரம், படத்தின் இயக்குநர் விஜய்சந்தர், படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன், தாணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் விக்ரம், “கமர்சியலாக ஒரு படம் பண்ணவேண்டும் என்று நினைத்து கொண்டிருந்த போதுதான் விஜய்சந்தர் இந்தக் கதையை சொன்னார். அவர் சொன்ன உடனேயே கதை பிடித்ததால் உடனே ஒகே சொன்னேன். இப்போது ‘ஸ்கெட்ச்’ நிறைய தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சத்யம் தியேட்டரில் மேட்னி ஷோவுக்கு நானும் சென்றேன். எவ்வளவு கூட்டம். சத்யம் என்றாலே ரசிகர்கள் அமைதியாக உட்கார்ந்து படத்தை ரசிப்பார்கள். ஆனா ‘ஸ்கெட்ச்’ படத்தை கலாட்டா பண்ணி ஆடியன்ஸ் பாத்தப்போ எனக்கு சந்தோஷமாயிருந்தது. படத்தில் சூரி நடித்த காட்சிகள் குறைக்கப்பட்டதற்குக் காரணம் நான்தான். அவரிடம் அதைப் பற்றி சொன்னதும் பெரிய மனது பண்ணி சரியென்றார். இதற்கு பிரயாசித்தமாக மற்றொரு படத்தில் அவர் ஹீரோவாகவும், நான் காமெடியனாகவும் நடிக்க தயார். இல்ல இரண்டு பேரும் ஹீரோவாக நடிக்க ரெடி. இல்ல இன்னொரு படத்துல அவர் கூட சேர்ந்து நடிக்கணும். சூரி ஒரு சிறந்த ஜென்டில்மேன். படப்பிடிப்புக்கு வருவதும் தெரியாது. போவதும் தெரியாது.” என தெரிவித்தார்.


Advertisement

இயக்குநர் விஜய்சந்தர்,‘‘இந்தப் படத்தில் ஒரு பாடலை எழுதியதற்கு விக்ரமின் தூண்டுதல்தான் காரணம். ஒருவரிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதில் விக்ரமிற்கு நிகர் அவர்தான்.’’ என தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement