உயிரை பணயம் வைத்து சிறுமியை காப்பாற்றும் ரியல் ஹீரோஸ்! (வீடியோ)

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவில் தீ விபத்தில் மாட்டிக்கொண்ட சிறுமியை தீயணைப்பு வீரர்கள் தங்களின் உயிரை பணயம் காப்பாற்றும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.


Advertisement

ஜோர்ஜியா நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், கடந்த ஜனவரி 3 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட வீட்டை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் தீயினால் எரிந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பல நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தின் போது தீயில் மாட்டிக்கொண்ட சிறுமியை, தீயணைப்பு வீரர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. 

இந்த வீடியோவில், குடியிருப்பு பகுதி முழுவதும் நெருப்பினால் எரிந்துக் கொண்டிருக்கிறது. அதன் பால்கனி பகுதியில் இருந்து, ஒரு நபர் சிறுமியை கையில் வைத்துக் கொண்டு கீழே இறங்க முயற்சிக்கிறார். நெருப்பு அதிகமானதால், பின்னர் மேலே இருந்துக் கொண்டே சிறுமியை தூக்கி போடுகிறார். நெருப்பு எரியும் பகுதியில் நின்றபடி தீயணைப்பு வீரர் சிறுமியை பத்திரமாக தாங்கிப் பிடிக்கிறார். பின்பு, அவர் ஒடி சென்று பெற்றோர்களிடம் சிறுமியை கொடுக்கும் காட்சிகள் பார்பவர்களுக்கு, தீயணைப்பு வீரர்களின் மேலுள்ள மரியாதையை அதிகப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர், அவர்களுக்கு தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதுப்போன்று, உயிரைப் பணயம் வைத்து மக்களுக்காக கடமையாற்றும் தீயணைப்பு வீரர்கள் உண்மையிலேயே ரியல் ஹீரோஸ் தான் என்றும் புகழாரம் சூட்டியுள்ளனர். 
 


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement