தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: சித்தராமையா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Advertisement

தமிழக டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் கருதி 7 டிஎம்சி நீரை காவிரியில் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். இதுதொடர்பாக முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், காவிரி நதிநீர் பங்கீடு தீர்ப்பாணைய உத்தரவுப்படி இந்த ஆண்டு வழங்க வேண்டிய நீரில் 68.224 டிஎம்சி குறைவாகவே வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியிருந்தார். மேட்டூர் அணையின் நீரிருப்பு டெல்டா விவசாயிகளின் தேவைக்கு போதுமானதாக இல்லாததால், கர்நாடகா காவிரியில் நீரைத் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கர்நாடகத்திற்கே போதிய தண்ணீர் இல்லாத சூழலில் தமிழத்திற்கு நீர் திறக்க முடியாது எனவும் சித்தராமையா கூறியுள்ளார். விரைவில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க உள்ளதாகவும் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரி வழக்கில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், தண்ணீர் திறந்துவிட சித்தராமையா மறுத்துள்ளார்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement