பேசுபொருளான முன்னாள் நீதிபதி கர்ணன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

6மாத சிறையை அனுபவித்து விட்டு கடந்த வியாழக்கிழமைதான் தமிழகம் வந்து சேர்ந்தார் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன். அவர் வந்ததற்கு யாரும் சென்று வரவேற்பு தெரிவிக்காவிட்டாலும், இப்போது இணையம் முழுக்க அவர்தான் ட்ரெண்டிங் டாப்பிக்.


Advertisement

உச்சநீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதிக்கு எதிராக பேச ஆரம்பிக்க பலரும் முதலில் நினைவுபடுத்தியது நீதிபதி கர்ணனைத்தான். அவர் மற்ற நீதிபதிகளோடு ஏற்பட்ட மோதலில் வழங்கிய தீர்ப்புகள் அவரை அப்போது பேசு பொருளாக்கியது. இப்போது வாய் திறக்காமலயெ பேசு பொருளாகியிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் பலரும் அவர் பற்றி மீம்ஸ், போட்டொ கமெண்ட் என அவரை புகழ்ந்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்


Advertisement


Advertisement

நீதித்துறையில் இது போன்று பிரச்னைகள் இருக்குனு அன்னைக்கே நீதிபதி கர்ணன் சொன்னாரு, நீங்க கேட்கல என்கிறார் ஒருவர் ; மற்றவரோ நீதிபதி கர்ணன் சொன்னப்போ கலாய்ச்சீங்க, இப்போ பாருங்க நாலு பேரு வந்திருக்காங்க என்கிறார். நீங்க என்னப்பா இப்பதான் வர்றீங்க, எங்க நீதிபதி உங்களுக்கெல்லாம் முன்னோடி சரியா என நீதிபதிகளை ஒருவர்  கேள்வி கேட்க, கர்ணனை அடக்க முயற்சித்தீர்கள், உண்மை நீர்க்குமிழி போல என ஆதரவுக்கரம் நீட்டுகிறார் மற்றொருவர் என ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீண்டும் அனைவராலும் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement