சவுதி அரேபியாவில் கால்பந்துபோட்டியை பார்த்து ரசிக்க, முதன் முறையாக பெண்கள் மைதானத்துக்குள் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.
சவுதி அரேபியாவில் மன்னராட்சி நடந்து வருகிறது. அங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய பட்டத்து இளவரசாகப் பொறுப்பேற்றுள்ள முகமது பின் சல்மான் அங்கு சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சவுதியில் சினிமா தியேட்டர் திறக்கவும் பெண்கள் கார் ஓட்டவும் விளையாட்டுகளை மைதானத்துக்குச் சென்று பார்க்கவும் அனுமதியளித்துள்ளார்.
இதையடுத்து ஜெட்டா நகரில் அல் -அஹி மற்றும் அல் - படின் அணிகளுக்கு இடையேயான லீக் கால்பந்து போட்டியை பார்க்க பெண்கள் நேற்று அனுமதிக்கப்பட்டனர். மைதானத்தில் அவர்களுக்காக அமைக்கப்பட்ட கேலரியில் குடும்பத்துடன் அமர்ந்து போட்டியை உற்சாக ரசித்தனர்.
இதுபற்றி போட்டியை காண வந்த, லம்யா கலீத் நாசர் என்ற 32 வயது கால்பந்து ரசிகை கூறும்போது, ‘இந்த நிகழ்வு வளமான எதிர்காலத்துக்கான மாற்றமாக இருக்கிறது. இந்த மாற்றத்தின் சாட்சியாக இருக்கும் நான், பெருமையடைகிறேன்’ என்றார்.
ஜெட்டாவைச் சேர்ந்த ருவேய்டா அலி கசாம் என்பவர் கூறும்போது, ‘சவுதியின் வரலாற்று முக்கியத்துவமான நாள் இன்று. மற்ற நாடுகளை போல பெண்களுக்கு அளிக்கப்படும் இந்த மாற்றங்கள் பெருமையாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
'தமிழகத்தில் திமுக ஆட்சி; மே.வங்கத்தில் மீண்டும் மம்தா!'- ஏபிபி-சிவோட்டர் கருத்துக்கணிப்பு
“மருத்துவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்”- முதல்வர் பழனிசாமி
பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்" - செல்லூர் ராஜூ
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?