[X] Close >

வெற்றி தோல்வியை ஒரே மாதிரியாகவே பார்க்கிறேன்: பிரபுதேவா!

I-Try-To-Take-Success-And-Failure-With-Equal-Spirit--Prabhu-dheva

சினிமாவில் வெற்றி, தோல்வியை ஒரே மாதிரியாகவே பார்க்கிறேன் என்று நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா கூறினார்.


Advertisement

ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைத்தளத்தில் பதிலளித்த அவர் கூறும்போது, ’வெற்றி அதிக மகிழ்ச்சியை தரும். அதே வெற்றியை அடுத்தும் கொடுக்க வேண்டுமே என்கிற அழுத்தத்தையும் கொடுக்கும். ஆனால் நான் இரண்டையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறேன். அடுத்து நான் நடிக்கும் ’மெர்க்குரி’ படம் பற்றி கேட்கிறீர்கள். இதில் வில்லனாக நடிக்கிறேனா என்பது பற்றியும் கேட்கிறீர்கள். அது சுவாரஸ்யமான படம் என்பதை பற்றி மட்டும் இப்போது சொல்ல முடியும். அடுத்து எப்போது படம் இயக்கப் போகிறீர்கள் என்கிறார்கள். விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வரும். நடனம், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு...இதில் உங்களுக்குப் பிடித்தது எது என்று கேட்டால், எல்லாமும்தான்’’ என்றார் பிரபுதேவா.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close