2018ல் இந்திய உள்நாட்டு உற்பத்தி 7.3% அதிகரிக்கும்..

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி நடப்பு ஆண்டில் 7.3% அதிகரிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.


Advertisement

2018ஆம் ஆண்டின் உலக பொருளாதார முன்னேற்றம் குறித்த ஆய்வறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தில் நடப்பு ஆண்டில் 7.3% உயரும் என்றும், அடுத்த 2 ஆண்டுகளில் இந்த சதவிகிதம் 7.5 ஆக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின்
பொருளாதாரம் 5.7% ஆக சரிந்தது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியாகும். ஆனால் இரண்டாவது காலாண்டில் 6.7%
ஆக உயர்ந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு உள்நாட்டு உற்பத்தி 7.3% உயரும் என கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement