திமுக கூட்டணியில் தொடர்ந்து செயல்படுவது என மதிமுக உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திராவிட இயக்கத்தை காக்கவும், மாநில சுயாட்சிக் கொள்கைக்கு வலுவூட்டவும், தமிழக வாழ்வாதரங்களைப் பாதுகாக்கவும், திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக தொடர்ந்து செயல்படுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும், ஒகி புயல் நிவாரணமாக தமிழகம் கோரியுள்ள 13,520 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு உடனே வழங்கவேண்டும், உள்ளாட்சி வார்டுகள் வரையறையை மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும், என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Loading More post
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்