ஐஎஸ்எல் கால்பந்து :டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை அணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டம் ஒன்றில் சென்னையின் எஃப் சி அணி, டெல்லி டைனமோஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. 


Advertisement

நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னையின் எஃப் சி அணி டெல்லி டைனமோஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.சென்னையில் நடைபெறும் இந்தப்போட்டி மாலை ஐந்தரை மணிக்குத் தொடங்குகிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடிள்ள சென்னை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று, 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே‌ வெற்றி பெற்று, கடைசி இடத்தில் உள்ளது. முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்புடன் சென்னை அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement