சொத்து தகராறில் வயதான பெண்கள் இருவர் கொலை: ஆசிட் ஊற்றிய இளைஞர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை திருவேற்காட்டில் சொத்து தகராறு காரணமாக வயதான இரண்டு பெண்களை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

திருவேற்காடு மாதிரிவேடு பகுதியில் ரங்கநாயகி, கிருஷ்ணவேனி என்ற வயது முதிர்ந்த 2 சகோதரிகள் வசித்து வந்தனர். வீட்டில் இருந்த மற்றவர்கள் ஓசூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் ரங்கநாயகியும், கிருஷ்ணவேனியும் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இருவரும் அணிந்திருந்த நகைகளும் எடுத்துச்செல்லப்பட்டிருந்தது.

உயிரிழந்த கிருஷ்ணவேனியின் மகன் சரவணன் கொடுத்த தகவலை அடுத்து காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் இரண்டு பெண்களும் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டதுடன், அவர்கள் மீது ஆசிட்டை ஊற்றி சென்றிருப்பது தெரியவந்தது. மோப்ப நாய் கொண்டுவரப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் ரங்கநாயகியின் வளர்ப்பு மகன் பாலகிருஷ்னன் சொத்து தகராறில் ‌இருவரையும் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பாலகிருஷ்ணனை கைது செய்த திருவேற்காடு காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‌.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement