தருமபுரி அருகே மனைவியை கொலை செய்த ஒருவர், தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
குண்டலபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் . அவரது மனைவி ஜெயலெட்சுமி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் ஆனது முதல் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. பெங்களூரில் வசித்து வந்த இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். இதனை அதிகாலையில் பார்த்த அக்கம் பக்கத்தினர், மதிகோன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் ஜெயலட்சுமி கழுத்தறுத்த நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். மேலும் காயத்துடன் இருந்த ஆறுமுகத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்