விரைவில் வருகிறது புதிய 10 ரூபாய் நோட்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்திய ரிசர்வ் வங்கி புதிய 10 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டுள்ளது.


Advertisement

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு புதிய ரூ.2,000, ரூ.500, ரூ.200, ரூ.50 உள்ளிட்ட நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்நிலையில் தற்போது புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிடவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக தற்போது அந்த நோட்டின் மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வெளியாகவுள்ள புதிய 10 ரூபாய் நோட்டு, பிஸ்கட் நிறத்தில் உள்ளது. ஒருபுறத்தில் வழக்கம்போல மாகத்மா காந்தியின் படம் உள்ளிட்டவை அச்சிடப்பட்டுள்ளது. மறுபுறத்தில் கொனார்க் சூரியக்கோயிலின் முத்திரையும் அச்சிடப்பட்டுள்ளது. இவற்றுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலின் கையெழுத்தும் உள்ளது. புதிய பத்து ரூபாய் வெளிவரவுள்ள போதிலும், பழைய நோட்டுகளும், காயின்களும் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement