கழிவறை விவகாரம்: தர்ணாவில் ஈடுபடப்போவதாக மக்களை மிரட்டும் சந்திரபாபு நாயுடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மார்ச் 31க்குள் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டவில்லையென்றால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிள்ளார்.


Advertisement

ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசும்போது, ஆந்திர மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் 100 சதவீதம் கழிப்பறை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 மாவட்டங்களிலும் இதேபோல் நிறைவேற்றப்பட வேண்டும். ஆந்திரா முழுவதும் தூய்மையான, சுகாதாரம் மிக்க மாநிலமாக மாற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளேன்.

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 490204 வீடுகள் உள்ளன. இவற்றில் 171624 வீடுகளில் மட்டுமே கழிப்பறைகள் உள்ளன. உங்கள் வீடுகளில் கழிப்பறைகள் கட்டாவிட்டால் நீங்கள் சுயமரியாதையை இழந்தவர்களாகி விடுவீர்கள். கழிப்பறை வசதிகள் இல்லாததால் ஆந்திர மாநிலத்தின் கவுரவம் குலைவதுடன் உங்களது ஆரோக்கியமும் கெடுகிறது. வேறு சில மாவட்டங்களிலும் இதே நிலை நீடிப்பதாக தெரிகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கிறேன். அதற்குள் கழிப்பறை வசதி இல்லாமல் எந்த வீடும் இம்மாநிலத்தில் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும்.


Advertisement

அப்படி இல்லையென்றால், உங்கள் கிராமத்துக்கு நான் வருவேன். இரவும் பகலும் உங்களுடன் இருந்து கழிப்பறையை கட்டிய பிறகுதான் அமராவதி நகருக்கு திரும்பி செல்வேன். இல்லையென்றால், வரும் மார்ச் மாதம் 31-ம் தேதிக்கு பிறகு அமைதியான வழியில் தர்ணா போராட்டத்தில் குதிப்பேன். ஒருநாள் முழுவதும் உண்ணாவிரதமும் இருப்பேன். அதன் பிறகாவது என் மீது பரிதாபப்பட்டு நீங்கள் கழிப்பறைகளைக் கட்டுவீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement