போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்தியூர் எம்.எல்.ஏ. களத்தில் இறங்கி பேருந்தை இயக்கினார்.
அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை தொடங்கிய வேலைநிறுத்தம் இன்றும் தொடர்கிறது. போக்குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
50 சதவீதத்திற்கும் மேலான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பேருந்துகள் பனிமனைகளிலேயே நிற்கின்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்துகள் பெருவாரியாக இயக்கப்படவில்லை. அந்தியூர் மலைப்பகுதி என்பதால் ஈரோடு, பவானி உள்ளிட்ட பகுதிகளுக்கு போக முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை கருத்தில் கொண்டு அந்தியூர் எம்.எல்.ஏ ராஜா கிருஷ்ணன் தானாக முன் வந்து பேருந்து இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். உரிய ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை சர்பார்த்த பின்னரே அவர் பணியாற்ற தொடங்கியதாக கூறப்படுகிறது.
முதலில் அந்தியூர் பனிமனையில் இருந்து மக்களை ஏற்றிக் கொண்டு பேருந்தினை இயக்கிய அவர், முதற்கட்டமாக பவானிவரை சென்று திரும்பினார். தொடர்ந்து பேருந்து இயக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடர் 8-ம் தேதி துவங்க உள்ள நிலையில், அதற்கு முன்பு வரை பேருந்தினை இயக்கப்போவதாக அவர் புதிய தலைமுறைக்கு அளித்தப் பேட்டியில் கூறியுள்ளார். எம்.எல்.ஏ. ராஜா கிருஷ்ணனின் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
Loading More post
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு