ஆளுநர் ஆய்வு செய்வதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆளுநரை பாராட்டி அமைச்சர் பாண்டியராஜன் பேசி இருக்கிறார்.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றதில் இருந்தே மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கோவை, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி, கடலூர் என பல மாவட்டங்களில் இதுவரை அவர் ஆய்வு செய்துள்ளார். ஆனால் ஆளுநரின் ஆய்வுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இன்றும் தஞ்சையில் ஆய்வுக்கு சென்ற ஆளுநருக்கு எதிராக திமுகவினர் கருப்புக் கொடி காட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதனிடையே, தஞ்சையில் தமிழ்பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை பாராட்டி பேசினார். மக்களின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எனவும் அமைச்சர் புகழாரம் சூட்டினார். தமிழகத்திற்கு ஆளுநராக வந்த சில நாட்களிலேயே, தமிழின் உன்னதத்தை உணர்ந்து பன்வாரிலால் புரோஹித் தமிழ் கற்றுவருவதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் குறிப்பிட்டார்.
Loading More post
“கொரோனா பரவலால் கும்பமேளாவை பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும்” - பிரதமர் கோரிக்கை
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை - சிம்ஸ் மருத்துவமனை விளக்கம்
வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் விறுவிறுப்பான மறு வாக்குப்பதிவு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்