தென்னாப்பிரிக்காவில் கோலி, தவான் போட்ட டான்ஸ்: வைரலாகும் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் அணிக் கேப்டன் விராத் கோலியும், ஷிகர் தவனும் தென்னாப்பிரிக்காவில் நடனமாடிய வீடியோக்காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. 


Advertisement

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்ரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு, 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 5-ம் தேதி கேப்டவுணில் தொடங்குகிறது. தென்னாப்ரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி, இதுவரை ஒரு தொடரைக்கூட வென்றதில்லை. எனவே இந்த முறை தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி உள்ளது. அத்துடன் இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்திய அணி வீரர்கள், கேப் டவுனில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக் கேப்டன் விராத் கோலியும், ஷிகர் தவனும் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுணில் நடனமாடிய வீடியோக்காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. கேப்டவுன் நகரில் உள்ள வீதியொன்றில் இசைக்கேற்ப இருவரும் நடனமாடி மகிழ்ந்தனர். அவர்களின் பாங்ரா நடனத்தை கூடியிருந்தோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இந்த வீடியோவை விராத் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா எடுத்துள்ளார்.
 


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement