தினமும் காலையில் ‘நமோ’ ஆப் மூலம் தான் அனுப்பும் செய்திகளை எம்.பிக்கள் யாரும் படிப்பதில்லை என்று பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக எம்.பி.க்களை ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள ‘நமோ’ என்ற செயலியை பயன்படுத்துகிறார். இந்த செயலி பிரதமரின் பெயரின் முதல் இரண்டு எழுத்துகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் எம்.பி.க்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பிரதமர் அனுப்பும் குறுஞ்செய்திகளையும், இமெயில்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான எம்.பிக்கள் கூட்டத்தில் பேசிய மோடி, “நான் தினமும் காலையில் நமோ ஆப் மூலம் நமஸ்தே சொல்கிறேன். உங்களில் நான்கு அல்லது ஐந்து பேர் தவிர அதை யாரும் கண்டுகொள்வதில்லை” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு 333 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 276 பேர் மக்களவை உறுப்பினர்கள், 57 ராஜ்யசபா உறுப்பினர்கள். காலை நேர வாழ்த்து செய்தியுடன் பல முக்கியமான தகவல்களை எம்.பிக்களுக்கு அனுப்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?