107 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய பாட்டி ஒருவரின் பிறந்த நாள் ஆசையை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நிறைவேற்றியுள்ளார்.
ட்விட்டர் வலைத்தளத்தில் அரசியல் கட்சி தலைவர்களில், அதிக மக்களால் பின் தொடரப்படும் தலைவர்களில் ராகுல் காந்தியும் ஒருவர். ட்விட்டரில் இவரை பின் தொடரும் மக்களின் எண்ணிக்கை குறித்து பல தருணங்களில் சர்ச்சைகளும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக ராகுல் காந்தி ட்விட்டரில் ஆக்ட்டிவாக இருப்பதாக காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். இது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போது ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தீபலி சிகான்ட் என்ற பெண் ஒருவர், தனது பாட்டி இன்று 107வது பிறந்த நாளை கொண்டாடுவதாகவும், அவரின் நீண்ட நாள் ஆசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திப்பதேயாகும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சில மணி நேரத்திலே வலைத்தளங்களில் அதிகம் பரவியது. இந்த பதிவைக் கண்ட ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் 107வது பிறந்தநாளை கொண்டாடும் பாட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துகள் என்றும் பதிவிட்டிருந்தார். அடுத்த சில மணி நேரத்திற்குள், தீபலி சிகான்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் மற்றொரு பதிவை பதிவிட்டிருந்தார். அதில், ராகுல் தனது பாட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்துமஸ் தினமான நேற்று இரவு நடந்த இந்த சம்பவம், சில மணி நேரத்திற்குள் ட்விட்டரில் ட்ரெண்ட் அடித்தது. மேலும், உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்பவர் ராகுல் என்றும் சிலர் ட்விட்டரில் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
Loading More post
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை
"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை"-சுகாதாரத்துறை செயலாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!