நெல்லை விசாரணை கைதி கொலை வழக்கில் ஒருவர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நெல்லையில் விசாரணை கை‌தி சிங்காரம் கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

அவர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலைச் சேர்ந்த அருள்மணி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுரையில் கைது செய்யப்‌பட்ட அவரை, காவல்துறையினர் நெல்லைக்கு கொண்டுவருகின்றனர். இந்த கொலை தொடர்பாக 10 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து, தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் சிங்காரம், அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். காவல் வாகனத்தை மறித்து இந்த கொலை செய்யப்பட்டிருக்கிறது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 4 கார்கள், அரிவாள், இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement