Advertisement

சுயேச்சையாக தினகரன் வெற்றி: 13 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பிய வரலாறு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சி வெற்றி பெறும் என்ற நிலை 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மாறியிருக்கிறது.


Advertisement

கடந்த 1980 ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த 50 இடைத்தேர்தல்களில் 8 தொகுதிகளில் மட்டுமே எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. அதிலும், கடந்த 2004-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது திமுக வெற்றி பெற்றதே இறுதியான வரலாறாக இருந்தது. அப்போது மங்களூர் தொகுதியில், திமுக சின்னத்தில் வெற்றி பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தனது பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், திமுக சார்பில் போட்டியிட்ட கணேசன், ஆளும்கட்சியாக இருந்த அதிமுகவின் வேட்பாளர் ராமலிங்கத்தை தோற்கடித்தார்.

அதன் பிறகு தற்போது ஆளும்கட்சியான அதிமுக வேட்பாளர் மதுசூதனனை, சுயேச்சை வேட்பாளரான டிடிவி தினகரன் தோற்கடித்துள்ளார். இவரைப்போல, பிரதானமான அரசியல் கட்சியிலிருந்து பிரிந்துச் சென்று சுயேச்சையாக போட்டியிட்டும் பலர் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக தாரமங்கலத்தில் 1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக செம்மலை வெற்றி பெற்றார். அதைப்போல, 1991-ம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் சுயேச்சையாக போட்டியிட்ட தாமரைக்கனி வென்றார். 2001-ம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அப்பாவு வெற்றி பெற்றிருந்தார். 2006-ம் ஆண்டு தளி தொகுதியில் நடந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ராமச்சந்திரன் வென்றார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement