சொந்த மைதானத்தில் ரோகித்: சாதிப்பாரா இன்றும்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது.


Advertisement

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை இழந்த இலங்கை அணி, இப்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்துவிட்ட இலங்கை, இன்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் பங்கேற்கிறது. 
மும்பை வான்கடே மைதானத்தில் இன்றைய போட்டி நடைபெறுகிறது. இது ரோகித் சர்மாவின் சொந்த ஊர் மைதானம் என்பதால் இன்றும் அவர் சாதிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்த மைதானத்தில் இதற்கு முன் நடந்த இரண்டு டி 20 போட்டியிலும் இந்திய அணி தோல்வியையே சந்தித்திருக்கிறது. 

இந்திய அணி தொடரை கைப்பற்றிவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் கடந்த போட்டியில் காயமடைந்த இலங்கை அணியின் மேத்யூஸ் இந்த போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று இலங்கை அணி தெரிவித்துள்ளது.


Advertisement

போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement