JUST IN

Advertisement

தென்னாப்பிரிக்கா டூர்: அணிக்குத் திரும்பினார் கேதர் ஜாதவ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தென்னாப்பிரிக்க அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்காக, விராட் கோலி தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement


இந்த மாத இறுதியில் தென்னாப்பிரிக்க செல்லும் இந்திய அணி மூன்று டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில்,  ஒரு நாள் போட்டிக்கான வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். 

விராத் கோலி கேப்டன். ரோகித் ஷர்மா துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஷிகர் தவன், ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி, ஆகிய பேட்ஸ்மேன்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக இலங்கையுடனா டி20 போட்டியில் பங்கேற்காத கேதர் ஜாதவ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள அஸ்வின், ஜடேஜாவுக்கு ஒரு நாள் தொடரில் வாய்ப்பளிக்கவில்லை. 


Advertisement

ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல் ஆகிய ஆல் ரவுண்டர்களுடன், குல்தீப் யாதவ், சேஹல், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement