[X] Close >

தோனியின் மறக்க முடியாத முதல் நாள் இன்று...!

23rd-December-2004-MS-Dhonis-Forgettable-ODI-Debut

இந்திய அணியின் கேப்டனாக பல்வேறு சாதனைகளை புரிந்த மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் களமிறங்கிய நாள் இன்று. 


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் தோனிக்கு நீங்கா இடம் எப்போதும் இருக்கும். 2004-ம் ஆண்டு வங்கதேசம் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிதான் தோனிக்கு முதல் சர்வதேச போட்டி. இன்று பல்வேறு சாதனைகளுக்கு உரியவராக இருக்கு தோனி முதல் போட்டியில் எடுத்த ரன்கள் பூஜ்ஜியம். முதல் போட்டியிலேயே ரன் அவுட் ஆகி ரன் கணக்கை துவக்காமல் வெளியேறினார்.

            


Advertisement

அறிமுக போட்டிகள் விவரம்:-

ஒருநாள் போட்டி: டிச. 23, 2004, வங்கதேசம்
டெஸ்ட்  போட்டி: டிச. 02 2005, இலங்கை
டி20 போட்டி     : டிச. 01, 2006, தென் ஆப்பிரிக்கா

முதல் போட்டியில் டக்-அவுட் ஆகி வெளியேறிய போதும், 50 ஆட்டங்களுக்கும் மேல் விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்களில் அதிகபட்ச சராசரி ரன் விகிதம் கொண்ட வீரராக தோனி இருந்து வருகிறார். 312 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9898 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 51.55 ஆகும். 


Advertisement

            

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி கடந்த 2014-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவரது ஓய்வு அறிவிப்பு எல்லோருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. கேப்டன் பொறுப்புகளில் இருந்து முற்றிலும் ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். 5,6-ம் நிலையில் பேட்டிங் செய்யும் தோனி தொடர்ந்து தன்னை நிரூபித்து வருகிறார். ஓரிரு போட்டிகள் சொதப்பினாலும் அணியில் இருந்து நீக்கும் அளவுக்கு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 

            

பேட்டிங் செய்யும் போது அவர் சரியாக பங்களிப்பு ஆற்றவில்லை என்ற போதும், ஒரு விக்கெட் கீப்பராக அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர் ஸ்டம்பிங் செய்யும் வேகத்திற்கும், ஸ்டைலுக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். அவரது ஸ்டம்பிங்கள் பல நேரங்களில் ஆட்டத்தின் வெற்றியையே தீர்மானிக்கும் அளவிற்கு இருக்கும். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தொடர்ச்சியாக பல ஸ்டம்பிங் செய்து வருகிறது. குறிப்பாக சாஹல்-தோனி கூட்டணி தொடர்ச்சியாக ஸ்டம்பிங் செய்து வருகிறது.

     

தோனி ரிவிவ்யூ கேட்டு விக்கெட் விளாமல் இருப்பது அரிது. டி.ஆர்.எஸ் முறைக்கு தோனி ரிவிவ்யூ சிஸ்டம் என்று ரசிகர்கள் அழைப்பர். யாருமே கணிக்க முடியாத அவுட்களையும் தனது நுண்ணறிவால் கணித்து பல முறை அசத்தியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அம்பயர் அவுட் கொடுக்க கையை உயர்த்தி முடிக்கும் முன்பே டிஆர்எஸ் கேட்டார். ரிவிவ்யில் அவுட் இல்லை என்பது தெரியவந்தது.

            

விராட் கோலிக்கு தேவையான சமயங்களில் சில அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். இதை கேப்டன் கோலியே பலமுறை பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ஆடுகளத்தில் இரண்டு கேப்டன்கள், வலைப்பயிற்சியின் போது எங்களுக்கு இரண்டு பயிற்சியாளர்கள் என்னும் அளவிற்கு அவரது பங்களிப்பு அணிக்கு இருந்து வருகிறது.

        

மொத்தம் 331 சர்வதேசப் போட்டிகளில் கேப்டனாக தோனி செயல்பட்டார். 2007-ல் டி-20 உலகக்கோப்பை, 2011-ல் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் மற்றும் 2013 சாம்பியன்ஸ் கோப்பையில் பட்டம் என அத்தனை சாதனைகளையும் தனது கேப்டன்ஷிப்பில் பெற்ற ஒரே கேப்டன் என்ற தனிப் பெருமைக்குரியவர். மேலும் இந்திய அணியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்பது உள்ளிட்ட சாதனைகள் அவர் வசம் உள்ளன.

ஐபிஎல் போட்டிகளிலும் தோனி தனி முத்திரை பதித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரண்டு கோப்பைகளை பெற்று தந்துள்ளார். தோனியின்  ஹெலிகாப்டர் ஷாட் மிகவும் பிரபலமானது. ஐபிஎல் தொடர்களில் அவர் அதிக ஹெலிகாப்டர் ஷாட் சிக்ஸர்களை அடித்துள்ளார். புனே அணிக்காக கடந்த இரண்டு வருடங்களாக விளையாடிய தோனி மீண்டும் சென்னை அணிக்கு திரும்புகிறார்.

            

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட மேலும் பல விருதுகளையும் பெற்ற தோனியின் வாழ்க்கை வரலாறு, ‘எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. தன் மனைவியின் பெயரால் சாக் ஷி அறக்கட்டளையை உருவாக்கி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறார்.

தோனி சர்வதேச போட்டியில் களமிறங்கிய நாளை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். போட்டியை சிக்ஸருடன் முடிப்பது, மின்னல் வேக ஸ்டம்பிங் உள்ளிட்ட தோனியின் பல்வேறு சிறப்புகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இலங்கைக்கு எதிரான போட்டியில் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து அவரது பாதத்தை தொட்டு வணங்கிய சம்பவம் ரசிகர்களின் மனதில் அவர் பிடித்திருக்கும் இடத்தை காட்டுகிறது. 

தோனிக்கு விராட் கோலியோ, ரோகித் சர்மாவோ அளிக்கு முக்கியத்துவம் 13 கால தோனியிசம் என்றும் சிலர் வர்ணிக்கின்றனர். இவ்வளவும் இருந்தும், கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில்தான் தோனியின் பங்களிப்பு தொடர்ந்து வருகிறது என்பதும் உண்மையே.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close