ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும்: கார்த்திகேயன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வாக்கு எண்ணிக்கையின்போதான நட‌வடிக்கைகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படுமென மாவட்ட ‌தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்தார். 


Advertisement

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் ‌பணி ராணி மேரி கல்லூரியில் காலையில் தொடங்க உள்ள நிலையில், அதில் பங்கேற்கும் 200 ஊழியர்களுக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி அலுவல‌த்தில் , மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், தேர்தல் சிறப்பு அதிகாரி பிரவீன் நாயர் தலைமையில் பயிற்சி வகுப்பு நடைபெற்ற‌து. இதில் கூடுதல் மாவட்ட வருவாய் அலுவலர்கள் லலிதா, திவ்யதர்ஷினி, சுபத்குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். வாக்கு எண்ணிக்கையின் போதான நட‌வடிக்கைகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படுமென மாவட்ட ‌தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்தார்.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement