ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Advertisement

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள், வீடுகள் மற்றும் கடைகளுக்குத் தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. இந்த சிலிண்டர்களை பெற, எண்ணெய் நிறுவனங்களின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மற்றும் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்தால் மட்டுமே பெற முடியும் என்கிற நிலைமை இதுவரை இருந்து வந்தது.

இந்நிலையில், ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வட இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை விரைவில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் காப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இந்த முன்பதிவு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவன
அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement