2ஜி ஊழல் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

CPM-about-2G-Scam-Judgement

2ஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்களை தண்டிக்க சட்டரீதியான மேல்நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 


Advertisement

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2ஜி விவகாரம் தொடர்பாக கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்குகளில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டினால் நாட்டிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பீட்டை ஏற்படுத்திய உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டிய பொறுப்பு சிபிஐ, மற்றும் அமலாக்கத்துறைக்கு உள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே, குற்றம் செய்தவர்களை தண்டிக்க சட்டரீதியாக அனைத்து மேல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் சிபிஐ, அமலாக்கத்துறையை அவர் வலியுறுத்தியுள்ளார்.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement