இந்தியாவில் 61.8% மரணங்கள் எப்படி நடைபெறுகின்றன என்று மத்திய அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் நோயினால் நிகழும் மரணங்களில் 61.8% வெளியில் உடனடியாக தெரியாத இதய கோளாறு, மாரடைப்பு, சிறுநீரக பிரச்சனை, சர்க்கரை வியாதி போன்றவற்றால்தான் நிகழ்கிறது என மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் ஏற்பட்ட மரணங்கள் 1990ஆம் ஆண்டில் 35.5% ஆக இருந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு 14.6% மாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மொத்த உயிரிழப்பில் ஊட்டச்சத்து குறைபாடின் தாக்கல் அபாயகரமானதாகவே உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய சுகாதார இலக்கு என்ற திட்டத்தின் கீழ் நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளின் மூலமாக அதீத மன அழுத்தம், வாய், மார்பக புற்றுநோய் போன்ற நோய்கள் 100 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதிகமான புற்றுநோய் மையங்களை ஏற்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Loading More post
மேற்கு வங்க தேர்தல்: பரப்புரை தடையை எதிர்த்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்
”மேற்கு வங்கத்தில் பாஜகவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது; ஆனால்...!” - பிரசாந்த் கிஷோர்
கேரளாவில் இருந்து தமிழகம் வர இ பாஸ் கட்டாயம்: எல்லையில் சோதனையை தீவிரப்படுத்தும் போலீசார்!
அதிகரிக்கும் கொரோனா: 10 மாநிலங்களில் உயர்மட்ட குழுக்களை களமிறக்க மத்திய அரசு திட்டம்!
இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!