3 நாட்களுக்குள் முடிந்த புனே டெஸ்ட்: இந்திய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

India-slump-to-one-of-their-worst-defeats

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


Advertisement

புனேவில் நடந்துவரும் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 260 ரன்களும், இந்திய அணி 105 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 155 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி, கேப்டன் ஸ்மித் சதத்தின் உதவியுடன் 285 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து 441 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ஸ்டீவ் ஓகஃபேவின் சிறப்பான பந்துவீச்சில் சுருண்டது. 33.5 ஓவர்களில் இந்திய அணி 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலிய வீரர் ஓகஃபே முதல் இன்னிங்ஸைப் போலவே 2ஆவது இன்னிங்ஸிலும் 6 விக்கெட் விழ்த்தினார். இந்திய மண்ணில் கடந்த 2004ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி பெற்றுள்ள முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement