இலங்கை அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார் ஹதுரசிங்கா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் சண்டிகா ஹதுரசிங்கா பொறுப்பேற்றுக் கொண்டார். 


Advertisement

இலங்கை கிரிக்கெட் அணி சமீபகாலமாக சரிவை சந்தித்து வருகிறது. தொடர் தோல்வியை சந்தித்து வரும் அந்த அணியின் பயிற்சியாளர் கிரஹாம் போர்ட் கடந்த ஜூன் மாதம் விலகினார். இதையடுத்து பீல்டிங் கோச், நிக் போதாஸ் கூடுதலாக பயிற்சியாளர் பணியையும் கவனித்துவந்தார். இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளராக இருந்த இலங்கையின் சண்டிகா ஹதுரசிங்காவை தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்துள்ளது. 

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை ஏற்று புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார் ஹதுரசிங்கா. 


Advertisement

பின்னர் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஹதுரசிங்கா, 'சொந்த நாட்டின் அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றது பெருமையாக இருக்கிறது. இந்தப் பதவியில் எனக்கு எந்த நெருக்கடியும் இருப்பதாக நினைக்கவில்லை. அணியை மேம்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதில் மட்டுமே என் கவனம் இப்போது இருக்கிறது’ என்று தெரிவித்தார்.
 

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement