கிரிக்கெட் வீரர் விராட் கோலி - நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது.
விராத் கோலியும் அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் இவர்கள் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் உள்ள சொகுசு விடுதியில் நேற்று நடந்தது. இதில்
பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு புதுமணத் தம்பதிக்கு பரிசு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்.
டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலும் பங்கேற்று வாழ்த்தினார். இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில மிக முக்கிய நபர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக மும்பையில் வரும் 26ஆம் தேதி மற்றொரு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர்களது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
அன்றைய தினம் விராட் - அனுஷ்கா தம்பதியின் நண்பர்கள், தோழிகள் மற்றும் இந்தி திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?