’தோனி அடித்த ஒரு நேர் ஷாட் என் மீது பட்டிருந்தால் என்னை கொன்றிருப்பார்’ என்று கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கூறினார்.
இலங்கை அணியுடன் கட்டாக்கில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 22 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் ராகுல்,48 பந்துகளில் 61 ரன்களை விளாசினார்.
போட்டிக்குப் பின் பேசிய கே.எல்.ராகுல், ’தோனியின் ஆட்டத்திறன் (ஃபார்ம்) பற்றியே அதிகமானோர் பேசுகிறார்கள். அது என்ன ஃபார்ம் என்று எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் தோனி சிறப்பாகவே ஆடுகிறார். அவருடன் ஆடும் போதெல்லாம் அவரின் ஆட்ட வேகம் கண்டு வியக்கிறேன். டிவியில் அவர் ஆடுவதை பார்க்கும்போது அவர் அதிகமாக ரன் குவிப்பவராகவே இருக்கிறார். கடந்த முறை கட்டாக்கில் விளையாடிய போது தோனி, 127 ரன்களில் 150 ரன்கள் குவித்தது ஞாபகம் இருக்கலாம். வீரர்கள் அறையில் இளம் வீரர்களை ஊக்கப்படுத்துபவராக இருக்கிறார் தோனி. அவர், மேட்ச் வின்னர். இந்தப் போட்டியில் அவர் அடித்த ஒரு ஸ்டிரைட் டிரைவ் பந்து என்னைக் கிட்டத்தட்டக் கொன்றிருக்கும். அவ்வளவு வேகம். நல்ல வேளையாக தப்பித்தேன்’ என்றார்.
Loading More post
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்
"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்