[X] Close >

ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு: இன்று விசாரணை

case-filed-requesting-cancelling-of-rk-nagar-byelection--enquiry-in-delhi-high-court

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.


Advertisement

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தன. இதனிடையே, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி ரஃபீக் அகமது என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதால் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என தேர்தல் ஆணையத்தில் கோரியதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் அவர் தெரிவித்திருந்தார். இதனால் நீதிமன்றம் தலையிட்டு தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்றும் ரஃபீக் அகமது தமது மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. முன்னதாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தாகும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close